யாழ்.மாநகரசபைக்கு விமோசனமில்லை!



இலங்கையில் உள்ளுராட்சி சபைகளது ஆயட்காலத்திற்கு 9 நாட்களேயுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே 70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்,

யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சி.சிறீதரன் மாநகர சபையில்  மக்கள் எமக்கு பெரும்பான்மையினை  வழங்க தவறி விட்டார்கள் அதைவிட எதிர்வரும் காலத்தில்  யாழ் மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர  சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது . 

எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசு கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும்  இடமில்லை 

மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது  விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை  கேட்பதற்குநாம்  தயார் இல்லை

ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர் 

அவர் நீண்ட   அரசியல் அனுபவம் உள்ளவர் ஆளுமை மிக்கவர் அவ்வாறான ஒருவரைத்தான் இம்முறை  எமது வேட்பாளராக தெரிவு செய்தோம் அது மாத்திரமல்ல  கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக கடுமையாக குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசு கட்சி முதல்வர்  வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.

எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது,,

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட முதல்வர் ஆனோல்ட்அவர்கள் தமிழீக விடுதலைப் புலிகளின் காலத்தில் பொங்கு தமிழ் நிகழ்வினை யாழ் மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் நடாத்தி தமிழ் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்த   மொழி ஆற்றல் உள்ளவரே மாநகர சபை முதல்வர்பதவிக்கு தகுதி உள்ளவர் என்ற ரீதியிலே  கட்சி தெரிவு செய்தது 

அதேபோல அவர்  பல்கலைக்கழகபட்டதாரி ஒரு முதல்வரானவர் படித்தவராகவும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் கட்சி இமானுவேல் ஆனோல்ட் அவர்களை கடந்த காலங்களில் முதல்வராக தேர்வு செய்திருந்தது எனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.



No comments