முல்லை கடலில் வீண் மோதல் வேண்டாம்!



முல்லைத்தீவில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாகவும் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் எனவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

"நேற்று முல்லைத்தீவு கடலில் இந்தியாவின் இழுவைப்படகுகள் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்,; கடற்படைக்கும் நீரியல் வளத்திணைக்களத்திற்கும் தெரியப்படுத்திய போதும் கடற்படையினர் வருவதாக சொன்னார்கள் ஆனால் எந்த விதமான படகும் வரவில்லை, துரத்துவதாக சொன்னார்கள் ஆனால் இல்லை.  நேற்று இரவு மாவட்டத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற படகுகள் அனைத்தும் கரையினை வந்துள்ளார்கள்.

காரணம் இந்திய இழுவைப்படகுகள் வலைபடுப்பதற்கு முடியாத நிலையில் படகினை இழுத்துக்கொண்டு வந்துள்ளார்கள். 

இந்திய இழுவைப்படகினால் தூண்டில் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று 5 பேரின் தூண்டில் தொழில் அழிவடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் மட்டும் இவ்வாறான நிலை, இன்று தீவு பகுதிகளிலும் நிறைய இந்திய இழுவை படகு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடற்படையின் அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர்கள் நல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையெனில் வன்முறையினை கையில் எடுக்கவேண்டி வரும்.

இந்திய இழுவைப்படகினால் எங்கள் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படுகின்றது.

இந்தியா எமக்கு நிதியினை கொடுப்பது மட்டுமல்லாமல், எங்களின் படகுகளை உங்கள் எல்லையில் வைத்து இங்கு வராமல் தடுக்கவேண்டும்.

இல்லையேல் வடக்கு கிழக்கில் இருக்கும் மீனவர்கள் கடலில் இறங்கி கடுமையான வன்முறையினை சந்திக்க வேண்டிவரும் என மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.


No comments