ஜப்பான் கடலில் சூப்பர்சானிக் ஏவுகணையை ஏவி சோதனையிட்டது ரஷ்யா

120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கக்கூடிய சூப்பர்சானிக் ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி சோதனையிட்டது ரஷ்யா.

ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய பி-270 மோஸ்கிட் என்ற அந்த ஏவுகணையை 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கற்பனை இலக்கு மீது ஏவி ரஷ்யா சோதனையிட்டது.

தங்களுக்கு மேற்கே உள்ள உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, கிழக்கே உள்ள ஜப்பான் கடலிலும் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துவருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.





No comments