மதம் தாண்டி இணைந்து ஒலித்த குரல்கள்!



வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நல்லூர் - நல்லை ஆதினம் முன்பாக சைவ மகா சபையின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில், இந்து மத குருமார்களுடன் கத்தோலிக்க மதகுருமார்களும்;,; கலந்து கொண்டிருந்தமை கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர்   ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதையும்,திருவிழாக்கள் செய்வதையும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக காவல்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இங்கு திருவிழா செய்ய முடியாமல் இருந்த சூழ்நிலையை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது மூன்று தினங்களுக்கு முன்பு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் இருக்கும் அனைத்து விக்கிரங்களும் உடைத்து எறியப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது  படைத்தரப்பினரால் இடம் பெற்றுள்ளதாக அறிகின்றேன்.

தொல்பொருள் திணைக்களத்தில் உதவியுடன் வெடுக்குநாறி மலையை பௌத்த மயமாக்கி, அதனை விகாரையாக்குவதற்காக தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேல் முயற்சி செய்து வந்தார்கள் எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயம் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை வவுனியா கந்தசாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து வவுனியா மாவட்டச் செயலகத்தை வந்தடைய உள்ளது.


No comments