கௌதாரிமுனையினை தொடர்ந்து சம்பூர்?வடக்கில் பூநகரி கௌதாரிமுனைப்பகுதியை காற்றாலை மின் உற்பத்திக்கென இந்தியா ஆக்கிரமித்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்தினால் திருகோணமலை சம்பூரிலும்; சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில் 135 மெகாவோட் சூரிய சக்தி திட்டத்தை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 42 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 50 மெகாவோட் சூரிய மின்சக்தித் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், சம்பூரில் இருந்து கப்பல்துறைக்கு 23 மில்லியன் டொலர் செலவில் 220 கிலோவாட் மின்சார விநியோக கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது.இந்த கட்டத்தை 2024 முதல் 2025 வரை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 72 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மேலதிகமாக 85 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் கட்டமை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 42 மில்லியன் டொலர் செலவில் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரை 220 கிலோவோட் திறன் கொண்ட 76 கிலோமீற்றர் நீளமான விநியோக கட்டமைப்பு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


No comments