அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் வலியுத்து


வடகொரியா சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்குமாறு அந்நாட்டு நிபுணர்களிடம் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று செவ்வாயன்று, அணு ஆயுத நிறுவன அதிகாரிகளுடன் ஒரு மாநாட்டில் போது வட கொரியா தனது அணு ஆயுதங்களை எப்போது வேண்டுமானாலும் எங்கும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று  கிம் கூறியதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

தனது நாட்டு விஞ்ஞானிகளை அணு ஆயுத உற்பத்தியை அதிகமாகவும் வேகமாகவும் உற்பத்தி செய்யவும் அணு ஆயுதத்தை விரிவு படுத்தவும், சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை உருவாக்கவும் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று செவ்வாயன்று தென் கொரியாவில் அமெரிக்க கடற்படை கேரியர் பயிற்சிக் குழுவின் குழுவின் திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக இச் செய்தி வந்துள்ளது.No comments