பௌத்தமயமாக்கலிற்கு டக்ளஸ் ஆதரவா?



இலங்கையின் தொல்பொருள் திணைக்களம், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளுக்கு, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றதா என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அனுமதியின்றி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அகற்றப்படாமையே இருக்கின்றது.

ஆகவே தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் விந்தன் கனகரட்ணம் தரிவித்துள்ளார்.

அறிவித்தல் பலகை தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் வைக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் நெடுந்தீவு வெடியரசன் கோட்டை புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே வெடியரசன் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பலகை சில தரப்பினரால் அகற்றப்பட்டிருந்தது.

இதனிடையே வெடியரசன் கோட்டையானது புராதன பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அடையாளப்படுத்தி, அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பித்தக்கது.


No comments