தேர்தல் செலவிற்கு பணம்:பம்முகின்றது அரசு!

 


உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைத் தேக்கி வைப்பதைத் தடுத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்க அரசு அச்சகத்துக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, உச்ச நீதிமன்றம் நேற்று மற்றொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments