கதிரை! கதிரை!! விலைக்கு வருகின்றது!


வடக்கிலும் செயற்பாட்டாளர்களிற்கு பதவிகள் கொடுத்து கைக்குள் போட்டுக்கொள்ள ரணில் முற்பட்டுள்ளார்.

இணைப்பபாளர் உள்ளிட்ட பதவிகள் தரப்படுமென பதவி ஆசை ஊட்டப்பட்டுவருவதுடன் சம்மதம் கோரப்பட்டுள்ளது

இதனிடையே ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்விப் பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் துரை மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments