சேர் கனவால் நெல் பாழ்!



இரசாயன உர தடையினால் கடந்த வருடம் நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைவினால் இருபத்து நான்காயிரத்திற்கும் ஐநூறு (24500) கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விசேட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள  தெரிவித்தார். .

இதனால் அந்த ஆண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த வருடம் தேயிலை உற்பத்தி 47,000 மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தேயிலை உற்பத்தியில் இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட நிதி இழப்பு ஆறாயிரத்து எண்பத்து நான்கு கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறப்பர் ஏற்றுமதி 1.8 வீதத்தாலும், தேங்காய் ஏற்றுமதி 5.9 வீதத்தாலும், மசாலா பொருட்களின் ஏற்றுமதி 18.9 வீதத்தாலும், மரக்கறி ஏற்றுமதி 6.6 வீதத்தாலும் குறைந்துள்ளதாக அத்துகோரள தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் கடந்த கோட்டபாய அரசாங்கம் கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் எண்ணாயிரத்து நானூற்று எண்பது கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் ஆய்வில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments