தேர்தல்:7ம் திகதி முடிவு!உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், அவர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments