நாளை திட்டமிட்டபடி போராட்டம்!

 


நாளை 15ஆம் திகதி புதன்கிழமை இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் மற்றும்  அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.  

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் நாளை  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். 

இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள்  இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாளைய தினம் நடைபெறவுள்ள தொழிற்சங்கப்போராட்டத்திற்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தெரிவித்துவருகின்றன.

எனினும் ஒரு சில அரச ஆதரவு தொழிற்சங்கள் தாம் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லையென அறிவித்துள்ள நிலையில் முக்கிய தொழிற்சங்கமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

ரணில் -ராஜபகச் அரசிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை புதன்கிழமை இலங்கை முழுவதும் தொழிற்சங்க போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments