அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதி வீழ்த்திய ரஷ்யப் போர் விமானங்கள்
கருங்கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் (MQ-9 Reaper ) மீது ரஷ்யப் போர் விமானமான எஸ்யூ-27 (Su-27) போர் விமானம் மோதியதால் அமெரிக்காவின் ஆளில்லாள விமானம் கருங்கடலில் விழுந்து நொருங்கியது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானமானம் எம்கியூ-9 (MQ-9 Reaper ) சர்வதேச வான்வெளியில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு ரஷ்ய ஜெட் விமானங்கள் இடைமறிக்க முயன்றதாக அமெரிக்கா கூறுகிறது.
எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, அது ரஷ்ய விமானத்தால் இடைமறித்து எரிபொருள் ஊற்றப்பட்டு விமானத்தில் மோதி தாக்கப்பட்டது, இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளானது மற்றும் முற்றிலும் இழந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
MQ-9 ரீப்பர் ட்ரோன் அதன் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்திய நிலையில் பறந்து கொண்டிருந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிரான்ஸ்பாண்டர்கள் விமானத்தை கண்காணிக்க அனுமதிக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள்.
ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளாகியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சம் கூறியுள்ளது. அத்துடன் இந்த விபத்துடள் ரஷ்ய விமானங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டதை ரஷ்யா மறுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவை அமெரிக்கா வரவழைத்தது.
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
கருங்கடலில் அமெரிக்க டிரோன் பறந்த சம்பவம் ஆத்திரமூட்டும் சம்பவம் என ரஷ்ய ஊடகம் அன்டோனோவைக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளத.
ரீப்பர் ட்ரோன்கள் 20 மீ (66 அடி) இறக்கைகள் கொண்ட கண்காணிப்பு விமானங்கள்.
Post a Comment