திருட்டு மின்சாரமெனவும் கைது?



 தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை முடக்க இலங்கை அரசு பகீரத முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா காவல்துறையால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம்  மேற்கொண்டுவரும் கொட்டகைக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2210 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொட்டகைக்கு  மின்சாரதூணில் பொருத்தப்பட்ட மின்விளக்கு ஒன்றிலிருந்து மின்சாரம் மின்சாரசபையால் வழங்கப்பட்டிருந்தது.

மின் இணைப்பில் பழுதுகள் ஏற்ப்பட்டபோதும் கூட இலங்கை மின்சாரசபையினை சேர்ந்தவர்கள் வருகைதந்து அதனை சீரமைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கைது அரங்கேறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் தனது மகள் உள்ளதாக கூறிய போராடிவரும் காசிப்பிள்ளை ஜெயவனிதாவே கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments