கச்சதீவு :மண் வியாபாரம்!

 இலங்கை கடற்படையினரது வசமுள்ள கச்சதீவு பகுதியில் உள்ள மண் திட்டுக்களில் இருந்து மணல் அகழப்பட்டு, நெடுந்தீவு கடற்படையினரின் தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.அவ்வாறு கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் கடற்படையின் படகுகளில் நெடுந்தீவிற்கு எடுத்து செல்லபட்டுள்ளது.

நெடுந்தீவில் கடற்படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ளமையால் அவர்களின் கடற்படை முகாமிற்கான கட்டுமானப் பணிக்காகவே கச்சதீவில் இருந்து மணல் அகழ்ந்து எடுத்துவரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு பகுதியில் தமிழர் புராதனத்தை பறைசாற்றும் வெடியரசன் கோட்டை, பௌத்த மதத்திற்கு உரியது என அடையாளப்படுத்தும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், தற்போது கச்சதீவில் இருந்து நெடுந்தீவிற்கு மணல் எடுத்து வருவதும் பெரும் பேசுபொருளுக்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே கச்சதீவிலும் பாரிய புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்து கடற்படையினர் வழிபட்டு வருவதும் இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கடற்படை வசமுள்ள பாலைதீவு முதல் கக்கடதீவு வரை புதிது புதிதாக புத்தர்சிலைகள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பி;டத்தக்கது.


No comments