வெடியரசன் கோட்டை:ஈபிடிபியை காணோம்!

 


நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்தமயப்படுத்துவதை கண்டித்து  இன்றைய தினம் புதன்கிழமை  நெடுந்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நெடுந்தீவில் ஆட்சி செலுத்தும் ஈபிடிபி மௌனம் செலுத்திவருகின்றது

ஆர்ப்பாட்ட போராட்டம் நெடுந்தீவு பிரதேசசெயலகத்திற்கு முன்னால் இன்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன் வரலாற்றை திரிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது.

அதேபோல் கச்சதீவிலும் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றன.

இவற்றை கண்டித்தே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருந்து மேலதிக காவல்துறையினர் நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments