டக்ளஸ் கடற்படையை தேடுகிறார்?

 


மீண்டும் இலங்கை கடற்படையினரின் செயற்பாடுகளை வடக்கு மீனவர்களது வாழ்வியலில் தலையிட வைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வடமராட்சியில் தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக புதிய விளக்கத்தை இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ளார்.

வடமராட்சி பகுதியில் தற்போது தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி தொழில் செய்வதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றார்கள் கடற்படையினர் அதனை கட்டுப்படுத்த தவறுகின்றார்கள் எனவும் குற்றம் சாட்டுகின்றார்கள் எனவே தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் பாதிப்பதனை இடமளிக்க முடியாது . நாளையிலிருந்து வடமராட்சியில் கடற்தொழிலுக்கு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் படகுகளும் கடற்படையின் சோதனை சாவடி ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா இராணுவமயமாக்கலை நியாயப்படுத்தியுள்ளார்.

இதனிடையே வடமராட்சி கிழக்கில் கடற்படையினரை அகற்றி இராணுவத்தினரை தேவையெனில் நிலைநிறுத்துங்கள் என வடமராட்சி கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடற் படையினரை அங்கு நிலைநிறுத்தி இருப்பதினால் தான் சுருக்குவலையை கட்டுப்படுத்த முடியவில்லை எனவே இராணுவத்தினரை நிலை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுததுள்ளனர்.

நாங்கள் ஏதாவது போராட்டம் ஒன்று செய்யப் போனால் காவல்துறையினர் அதிரடிப்படைகளை கொண்டு போராட்டத்தை தடுத்து நிறுத்துகிறார்கள் ஆனால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை கொண்டு தொழிலுக்கு செல்லும் நபர்களை ஏன் இன்றுவரை கைது செய்ய முடியாமல் உள்ளது எனவும் மீனவ சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


No comments