ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி!


ஜேர்மனியின் ஹாம்பேர்க் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கூட்ட அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி 30 மற்றும் 40 வயதுடைய மத சமூகத்தின் முன்னாள் உறுப்பினர் என்று Der Spiegel பத்திரிகை தெரிவிக்கிறது.

துப்பாக்கிதாரி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் இதுவரை தாக்குதலின் நோக்கம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் இறந்த நபர் ஒருவரைக் கண்டுபிடித்ததாகவும், அவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை 21:15 (20:15 GMT) மணியளவில், கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹோல்கர் வெஹ்ரென் தெரிவித்தார்.

உள்ளே சென்ற அதிகாரிகள், துப்பாக்கிகளால் பலத்த காயம் அடைந்தும் அவர்களில் சிலர் மரணமடைந்தும் காணப்பட்டனர் என்று அவர் கூறினார்.

இதுவரை எந்த குற்றவாளிகளும் தப்பி ஓடியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை என்றும், குற்றம் நடந்த இடத்தில் பணிகள் தொடர்ந்தன என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments