யாழில். கடலட்டைகளுடன் 6 பேர் கைது


யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஒரு தொகை கடலட்டைகளும் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக குருநகர் மீன்பிடி பரிசோதகரிடம் குறித்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments