வரி ஏய்ப்பு செய்பவர்களை உடனடியாக அடையாளம் காணுமாறு உத்தரவு!


வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்பவர்களை உடனடியாக அடையாளம் காணுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருமானத்தை வெளியிடாமல் தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு செய்யும் சில தொழில்களில் ஈடுபடும் நபர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அடையாளம் காண வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வரி விதிப்பு மற்றும் வரி அறவீடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தில் கவனம் செலுத்தப்பட்ட நேரத்தில் வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

No comments