யாழில் 11 சந்தை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை (தராசுகள்) பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்றைய தினம் புதன்கிழமை பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு மீன் சந்தை மற்றும் சின்னக்கடை மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

 அவ்வேளையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை. நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களைப் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினர் தெரிவித்தனர். 

No comments