யாழில். உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது!


யாழ்ப்பாணத்தில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் என்பன கைப்பற்றப்பட்டள்ளது. 

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை உழவு இயந்திரத்தில் மரங்களை ஏற்றி சென்ற நபரை பொலிஸார் மறித்து அனுமதி பத்திரத்தை கேட்ட போது , அனுமதி இன்றி மரம் கொண்டு செல்லப்படுவதனை அறிந்து , அதனை கொண்டு சென்றவரை கைது செய்தனர். 

இதன்போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கும் எந்தவொரு ஆவணங்களும் இல்லை எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments