யாழில். போசாக்கின்மையால் குழந்தை உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் போசாக்கு குறைப்பாட்டினால் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி சுகவீனமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு போதிய போசாக்கு இன்மையே இறப்புக்கான காரணம் என குறிக்கப்பட்டுள்ளது. 

No comments