அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமியின் ஏற்பாட்டில் மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் இன்றைய தினம் வியாழக்கிழமை இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்ட மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Post a Comment