துருக்கி மற்றும் சிரியரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐத் தாண்டியது!


துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நில நடுக்கத்தில் இதுவரை 11, 236 பேர் உயிரிழந்துள்ளது. இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் கட்டிட இடிபாடுகளுக்கும் பொதுமக்களைக் காற்பாற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 11,236 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகிறனர். மூன்று நாள் கடந்தும் இன்றும் சிறுவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

வடமேற்கு சிரியாவின் ஜின்டிரெஸ் நகரத்தில், இறந்த தாய்க்கு தொப்புள் கொடியால் இணைக்கப்பட்ட அழுதுகொண்டிருந்த பிறந்த குழந்தையை குடியிருப்பாளர்கள் கண்டனர். அவரது குடும்பத்தில் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.

1939ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப்குதி நகரமான எர்சின்கான் மாகாணத்தில் இடம்பெற்றிருந்து நில நடுக்கத்தில் 33,000 பேர் அன்று உயிரிழந்திருந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments