சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் வேவு பலூனின் பாகங்கள் மீட்பு!


அமெரிக்க போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் வேவு பார்க்கும் பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி, கடல் மேற்பரப்பில் விழுந்த அராட்சத பலூனின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடலுக்கு அடியில் சென்ற பலூன் சிதைவுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது என்றும் கூறினார். 

தங்களுக்கு கிடைத்த தகவலை பகுப்பாய்வு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

No comments