நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம்!
நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதிக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

"தற்போதைய நாடாளுமன்றை கலைக்கும் சட்ட அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார். அந்த அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துவார் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments