யாழ்.பல்கலை மாணவனின் மோட்டார் சைக்கிளில் திருட்டு ; மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினமன்று, மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் விவரத்தை பகிரங்கப்படுத்தி அதனை அடையாளம் கண்டுகொண்டால் தகவல் வழங்கி உதவுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments