உயர்தர பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள்
கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவை 3,000 ரூபாயாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார்.
இருப்பினும் அது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் வெளியிடப்படாத காரணத்தால் தற்போது 500 ரூபாய் வழங்கப்படுகின்றது என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
Post a Comment