சுமா கம்பெனி கூட்டம் கூடியது!இலங்கை தமிழரசுக்கட்சி தனித்து தேர்தல் களம் புகுந்துள்ள நிலையில் எதிர்தரப்புக்களது பிரச்சாரமும் உச்சமடைந்துள்ளது.

இந்நிலையில்  யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுககூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பினால் நடாத்தப்பட்டுள்ளது. எனினும் மாவை சேனாதிராசா தவிர்ந்த ஏனைய தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர்.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழரசு கட்சி போலி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவிததுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி பிரிந்து தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்த பின்னர் தற்போது மக்களிடையே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கட்சிகள் தான் தமிழரசு கட்சியை வெளியேற்றியதாக மக்களிடையே பொய்யான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

தனிக்கட்சி தாங்கள்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று மக்களிடையே பரப்புரைகளை மேற்கொண்டுவரும் செயல்பாடு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்புதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர ஒரு தனி கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இல்லை. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை உள்வாங்கி ஒரு பலமான இயக்கமாக செயல்படும் என்றார். குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞரணித் தலைவருமான சபா.குகதாசும் பங்கேற்றார்.

No comments