நெல்லோ வெள்ளத்தினுள்:விலை பேசும் ரணில்!


வன்னியில் நெல் பயிர்கள் முற்றாக நெல் முற்றிய நிலையில் மழை வெள்ளத்தினுள் மூழ்கியுள்ளது.இதனால் அறுவடை முற்றாக முடங்கியுள்ளது.

இதனிடையே அறுவடை செய்யப்படுகின்ற 20 வீதமான நெல்லை,  கிலோ ஒன்று 100 ரூபாய் வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பூங்காவனம் எனும் கிராமத்தில் பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


No comments