மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 67 வெளிநாட்டவர்கள் கைது


மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தின் நிலாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிவரவுத்துறை தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத குடியேறிகளாக கண்டறிப்பட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த குடியேறிகள் அனைவரும் இந்தோனேசிய நாட்டவர்கள் என அம்மாநில குடிவரவுத்துறை இயக்குநர் கென்னித் தன் அய் கியாங் தெரிவித்திருக்கிறார்.

காட்டுப்பகுதிக்குள் இருந்த சட்டவிரோத கட்டிடத்திலிருந்து இக்குடியேறிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டிடம் கட்டுப்பட்டு குடியேறிகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக கண்டறிப்பட்டிருக்கிறது. 

இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக Lenggeng குடிவரவுத் தடுப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். 

No comments