சீனாவின் வேவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா


வேவு பார்க்க ஏவப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூனை அட்லாண்டிக் கடல்பரப்பில் எவ்-22 ரக போர் விமானங்கள் மூலமாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜஸ்டின், அமெரிக்க மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இறையாண்மை மீறல்களுக்கு தக்க விதமாக பதிலடி தரப்படும் என்றும் கூறினார்.

கடலில் விழுந்த அதன் பாகங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. அந்த பலூன் அமெரிக்காவின் ஏவுகணை மையத்தை உளவுபார்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே லத்தீன் அமெரிக்கா மீது இரண்டாவது சீனா பலூன் பறப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

No comments