ஆஸ்ரேலியா பணத்தாளில் இருந்து மன்னர் சார்லசின் படங்கள் நீக்கம்!!


ஆஸ்திரேலியாவின் பணத்தாளில் இருந்து இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லசின் புகைப்படத்தை நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மறைந்த ராணி எலிசபெத் உருவப் படங்கள் பதித்த பணத்தாள்கள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன.

அவரது மறைவுக்கு பின்னர், பழைய பணத்தாளில் இருந்த ராணி உருவப் படத்திற்கு பதிலாக, இங்கிலாந்து மன்னராக பதவியேற்ற 3ஆம் சார்லஸின் படங்களை இடம்பெற செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிவரும் காலங்களில் பணத்தாள்களில் 3ஆம் சார்லஸின் புகைப்படம் இடம்பெறாது எனவும், புதிய ஆஸ்திரேலிய டொலரானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments