தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழில் கலாச்சார வாகன பேரணி!


யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ல.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் போதே ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாண ஆளுநர்,  யாழ் மாவட்ட செயலர்,  , வட மாகாண பிரதம செயலாளரின் பங்குபற்றுதலில், நிகழ்வினை திறம்பட நடாத்துவதற்கு மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் முக்கியமான நிகழ்வு நாளைய தினம் கொழும்பிலும் அத்தோடு கண்டியில் பிரார்த்தனைகளும் இடம்பெற்று எதிர்வரும் 11ம் திகதி யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிகழ்விலே மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. 

 இந்தியாவால் தரப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தினை முறையாக கையளித்து அதனை செயற்படுத்தும் முகமாக அன்றைய தினம் காலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 

அதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை நிகழ்வாக ஐந்து மாவட்டங்களும் தங்களுடைய மாவட்டத்தினுடைய தனித்துவமான பிரசித்தி பெற்ற கலை அம்சங்களை உள்ளடங்கிய வாகன பேரணி, இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இருந்து  யாழ் நகர் வரை சென்று நிறைவு பெறுவதற்குரியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அதன் பின்பதாக மாலையில் கலாச்சார, இசை நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கலாச்சார இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.


No comments