பேரணியில் கலந்து கொண்ட வாகனத்தின் மீது கல் வீச்சு!
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்ட வாகனம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாறை தம்பட்டை பகுதியில் வாகனம் மீது கல் வீச்சு தாக்குதல் நடப்பட்டுள்ளது. அதில் வாகன கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.

பேரணியில் கலந்து கொள்வோரை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வரும் நிலையில், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

தொடர் அச்சுறுத்தல்களை தாண்டியும் பேரணி மட்டக்களப்பை அண்மித்துள்ளது.

No comments