துருக்கி செல்ல 300 இலங்கை இராணுவத்தினர் தயார் நிலையில்!


துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ராணுவ மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொறியியல் படை அதிகாரிகள் உள்ளனர்.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள இந்த குழுவில் பிரிகேடியர் ஒருவரும் இணைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

துருக்கி தூதரகத்தால் அறிவிக்கப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

No comments