கரிநாள் போராட்டம் முடங்கியது யாழ்ப்பாணம்!இலங்கையின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கரிநாளாக அனுஸ்டிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையடுத்து யாழ்.நகர் உள்ளிட்ட தமிழர் தாயகம் இன்று முடங்கிப்போயிருந்தது.

குறிப்பாக வீதி போக்குவரத்துக்களும் முடங்கியிருந்தது.

ஒருபுறம் பல்கலைக்கழக மாணவர்களது பேரணி யாழில் நடைபெற மறுபுறம் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது.கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் போராட்டத்தில் குதித்திருந்தனர். 

No comments