எடுப்பது பிச்சை:பிடிப்பது சிங்கக்கொடி!இலங்கையின் 75வது சுதந்திரதினத்தை வழமையாக தெற்கு கொண்டாடுகின்ற போதும் வடக்குகிழக்கு மக்கள் அதனை தமது சுதந்திர தினமாக கருதுவதில்லை.

இந்நிலையில் மக்கள் பட்டினியில் வாடும்போது 16 கோடி ரூபா செலவில் சுதந்திரதினக் கொண்டாட்டம் தேவையாவென தெற்கிலும் இம்முறை கேள்வி எழுந்துள்ளது.

காலி முகத்திடலில் இன்று நடந்தேறிய சுதந்திர தின விழாவில் பங்கெடுக்கும் பிரமுகர்களிற்கு நடமாடும் மலசலகூடத்திற்கு மட்டும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

இதனிடையே கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை 500 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். அதாவது 50,000 கோடி ரூபாவை விட அதிகம். 

ஆனால் எதிர்க்கட்சியினரோ சுதந்திர தினக்கொண்டாட்டங்களுக்காக செலவிடப்படும் 20 கோடி ரூபாவிற்கு காட்டும் எதிர்ப்பில் ஒரு சில சதவீதத்தைக் கூட பாதுகாப்புச்செலவீனத்திற்கு காண்பிக்கத்தவறியுள்ளதைப் பார்க்கையில் இது ஏதோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75வது சுதந்திர தினக் கௌரவத்தைப் பெற்றுவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் வெளிப்படுத்தப்படும் கண்டனங்களாகவே தோன்றுகின்றன. 

உண்மையில் இந்த நாட்டில் நிலையான பொருளாதார விமோசனமும் சுபீட்சமும் மலரவேண்டுமென்றால் எதிரக்கட்சிகள் பாதுகாப்புச்செலவீனத்திற்கு எதிராக குரல்கொடுக்கவேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து முன்வைத்துள்ளார்.


No comments