வாழ்த்தியது பொய்யே!



இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ள நிலையில் சுதந்திர தினத்திற்கு வாழ்;த்து தெரிவித்துள்ள தலைவர்கள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.

முல்லைத்தீவு நகரில் சுற்றுவட்டம், பொதுச் சந்தை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட இரண்டு பதாகைகள் நேற்று முன்தினம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக தமிழர்கள் அனுஸ்டிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் கட்டப்பட்டிருந்ததையடுத்து  பிரதேச மக்களையும் தமிழரசு கட்சியின் தொண்டர்களையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியிருந்தது.

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் து.ரவிகரன்  கலந்துகொண்டிருக்கும் நிலையில், பதாகை கட்டப்பட்டிருந்தது.

அதே போன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் கரைச்சி பிரதேசசபை தவிசாளரும் தமிழரசுக்கட்சி பிரமுகருமான வேழமாலிகிதன் பெயரிலும் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து, பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தது.

எனினும் பின்னராக தமிழரசு கட்சியின் தொண்டர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைதீவில் பதாகைகளை தாமே முன்வந்து அகற்றியிருந்தனர்.


No comments