ஈபிடிபிக்கு ரணில்,அண்ணாமலை பிரச்சாரம்!



ரணிலின் யாழ்ப்பாண வருகை முற்றாக ஈபிடிபியின் தேர்தல் பிரச்சார மயமாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளை மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய முன்னெடுக்கும் வகையில் யாழ் மாவட்ட சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் இன்று நடைபெற்றிருந்தது.

முற்றாக ஈபிடிபி ஆதரவாளர்கள் பங்கெடுத்த நிகழ்வாக ஜனாதிபதி வருகை மாற்றப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தேன் அப்போது விமானம் மூலம் கொழும்பு வந்து, எட்டு மணி நேரம் பயணம் செய்து யாழ்ப்பாணம் வந்திருந்தேன்.

ஆனால் இம்முறை வெறும் நாற்பத்தைந்து நிமிடத்தில் யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன் இதன் மூலம் ஈழத்தமிழரோடு இந்தியா கொண்டுள்ள பிணைப்பின் வேகத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்த மேடையில் பேசி கைதட்டு வாங்குவதை  விட ஈழத்தமிழர்கள் தொடர்பாக நான் தமிழ்நாட்டில் பேசும் விடயங்களை நீங்கள் எடுத்து நோக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட காலசார மையம் யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்டது என்பதை இலங்கையில் இருந்துகொண்டே மிக உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

இவ்வாறான கலாசார மையம் இந்தியாவில் கூட இல்லை என்பதோடு, ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்குமான உறவுப்பிணைப்பு இன்னும் இன்னும் இறுக்கமாக தொடரும் என்ற நம்பிக்கையையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறி மகிழ்கிறேன் என ரணிலுக்கு பிரச்சாரத்தை பாஜக தலைவர்  அண்ணாமலை முன்னெடுத்துள்ளார்.




No comments