6வது வருடம் தொடரும் போராட்டம்!



காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி வடகிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்கின்றன.

அதன் ஒரு அங்கமான கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளது..

போராட்டத்தின் 6ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப்;போராட்டம் இலங்கை படைகளால் சந்திரன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள யுத்த நினைவு சின்னம் வரை இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தின் போது, தமது கைகளை கட்டியவாறு, தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தி உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களிற்கு ஆதரவாக மத தலைவர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் இணைந்திருந்தனர்.

இதனிடையே முல்லைதீவு,வவுனியா மற்றும் திருகோணமலை ,அம்பாறை மாவட்டங்களிலும் ஆறாவது வருடத்தை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி குடும்பங்களது போராட்டங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.


No comments