இலங்கை நாடு பிச்சைக் கிண்ணத்துடன்!



இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான சிங்கள மேலாதிக்கத்தை தீர்க்கப் போவதில்லை. இலங்கை நாடு பிச்சைக் கிண்ணத்துடன் உலகம் சுற்றும் வேளையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் உலக நாடுகளுக்கு நாட்டை நல்ல வெளிச்சத்தில் காட்ட முடியும் என்பதே ஜனாதிபதியின் உள் எண்ணம் என தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்.

சிங்கள மக்களும் அவர்களது அரசியல்வாதிகளும் எம்மீது கொண்டுள்ள மேலாதிக்கப் பிடியில் இருந்து வெளிவருவதற்கு நாம் கூட்டாட்சி முறையைக் கேட்கின்றோம். தமிழர்களுக்கு எதையும் கொடுக்காதீர்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். 

ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் முழு நாட்டிலும் அதற்குரிய பிடியையும்; சிங்களவர்கள் பெற்றதன் மூலம், தீவு முழுவதும் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் பெற்ற பிடியை இழக்க எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியும் இப்போது தயாராக இல்லை.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சிங்களவர்களுக்கு வழங்குவது ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டமே. சிங்களவர்களுக்கு வரலாற்று ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ வடக்கு மற்றும் கிழக்கின் மீது எந்த ஒரு உரித்தோ உரிமையோ இல்லை.

தமிழ் பேசும் மக்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளனர். தேவையெனின் நாட்டின் புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்திய மற்றும் சர்வதேச வரலாற்றாசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்குமாறு கிய ஜனாதிபதி அவர்களிடம் பிக்குகள் கேட்கலாம எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments