சத்தியமாக தேர்தல் இல்லை!பல்வேறு காரணங்களால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே கொழும்பு பொரளையிலுள்ள அரசு அச்சக அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் சிறப்புக் குழுக்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நூறு இராணுவத்தினரும் ஐம்பது பொலிஸ் உத்தியோகத்தர்களும் வரவழைக்கப்பட்டு விசேட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments