தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது – மஹிந்த!


உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றே தமது கட்சி கருதுகிறது. தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக யார் சொன்னது? தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார் 

No comments