நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ; கலைக்கும் அதிகாரம் இன்று முதல் ஜனாதிபதியின் கையில்!


நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்ததை அடுத்து நாளைய தினம்  புதன்கிழமை காலை 09.30 மணிக்கு  நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடியதனை அடுத்து எதிர்க்கட்சியினர் உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரி நாடாளுமன்றினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அதனால் சபையில் அமளி ஏற்பட்டதனை அடுத்து சபை அமர்வுகள் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை முதல் , நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments