யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் மாலை விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை  யாழ். கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, சுதந்திர தின நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி என்பனவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments