தேர்தலிலும் QR நடைமுறை?


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த வேட்பாளர்களின் பட்டியல் உரிய QR குறியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச்  9ஆம் திகதி நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments