ஐபிசி பாஸ்கரனுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!


ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் கிளிநொச்சி பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு கிளிநொச்சி - பூநகரி வீதியில் பரந்தன் குமரபுரம் பகுதியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments