சீனாவில் 2,400 ஆண்டுகள் பழமையான கழுவக்கூடிய கழிவறை கண்டுபிடிப்பு


சீனாவில் 2,400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஷான்சி மாகாணத்திலுள்ள யுயாங்கில் அமைந்துள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இந்த கழிப்பறை காணப்பட்டது. இந்த   ஆய்வுகளின் போது தோண்டி எடுக்கப்பட்ட இந்த கழிவறையை கண்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரேகழுவிச் செல்லக்கூடிய ( ஃப்ளஷ்) கழிப்பறை இதுவாகும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.

கழிப்பறையின் பயன்படுத்தப்பட்ட கழிப்பறையில் ஒரு பகுதி அகழ்வாராய்ச்சியின் போது காணப்படவில்லை. எனவே குளியலறையைப் பயன்படுத்தும் போது பயனர் உட்காருவாரா? அல்லது குந்துவாரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கிமு 381 முதல் 338 வரை வாழ்ந்த கின் சியாகோங் அல்லது அவரது தந்தை கின் சியாங்கோங் (கிமு 424 முதல் 362 வரை) கழிப்பறையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments